மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் இன்று (டிசெ. 14) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஏழாலையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் இணுவிலைச் சேர்ந்த இருவரும் என்று 5 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனை அறிக்கையே இன்று மாலை 6.15 மணிக்கு வெளியாகியுள்ளது.
அங்கு இன்று 98 பேரின் மாதிரிகள் மட்டும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.