சடலங்களை மாலைதீவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை நடைமுறை சாத்தியமற்றது!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை என்பது நடைமுறை சாத்தியமற்றது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இவ்வாறு கூறினார்.

நாட்டிற்குள்ளேயே அடக்கம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பொதுமக்கள் அல்லது அரசாங்கத்தால் ஏற்படும் செலவைக் குறைக்க முடியும் என்றார்.

விஞ்ஞான ரீதியில் பகுப்பாய்வு செய்வதன் மூலம், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தை அடையாளம் காண வேண்டும் எனக் கூறினார்.

இந்த நடைமுறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது என்றும் எனவே அனைத்து தரப்பினருடைய உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.