கொழும்பு உச்ச நீதிமன்றத்தால் சேகரிக்கப்பட்ட தமிழர் தொடர்பான போலி ஆவணங்கள் எரியவில்லை-சிங்கள ஊடகம் தகவல்

கொழும்பில் அமைந்துள்ள உச்ச நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற தீ விபத்தினால் ஆவணங்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை 4.55 மணியளவில் கொழும்பு உச்ச நீதிமன்றின் பழைய பொருட்களைக் கொண்ட களஞ்சியப் பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக காரியாலங்களுக்கோ, நீதிமன்ற ஆவணங்களுக்கோ அல்லது வழக்கு பொருட்களுக்கோ சேதம் ஏற்படவில்லை என நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே மயாதுன்ன தெரிவித்துள்ளார்.

தீ முழு அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீ விபத்து எதனால் நேர்ந்தது குறித்து கண்டறியும் பொறுப்பு அரசாங்க இரசயான பகுப்பாய்வு பிரிவு மற்றும் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.