4.2 பில்லியன் டொலர்களை நன்கொடை வழங்கிய ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கென்சி!

மெரிக்காவைச் சேர்ந்த 50 வயதான மெக்கென்சி ஸ்கொட் (MacKenzie Scott) அமேசன் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜெப் பெசோஸுடனான 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையிலிருந்து அண்மையில் விவாகரத்து பெற்றார்.

இதன் காரணமாக அவரிடமிருந்த ‘அமேசான்’ நிறுவனத்தின் பங்குகளில் 4 % பங்குகளை மெக்கென்சி பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் உலகின் 18ஆவது பணக்காரராகவும், உலக அளவில் பெண்களில் மூன்றாவது பணக்காரராகவும் விளங்குகிறார்.

சொத்துமதிப்பு உயர்ந்து வரும் அதேநேரத்தில் அவர் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் வள்ளலாகத் திகழ்கிறார்.

இந்நிலையில் மெக்கன்சி கல்வி, ஏழை எளிய மக்களின் மேம்பாடு ஆகியவற்றுக்காக சுமார் 384 நிறுவனங்களுக்கு 4.2 பில்லியன் டொலர்களை நன்கொடை வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.