சட்ட மா அதிபரை கைவிட்டது கொரோனா-பி.சி.ஆர் பரிசோதனை உறுதி!

பி.சி.ஆர் பரிசோதனைகளில் முடிவுகளின் படி சட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

வவுனியாவில் விடுதி திறப்பு விழாவிற்குச் சென்ற சட்ட மா அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட அரச சட்டதரணி ஒருவருக்கு கடந்த 15 ஆம் திகதி இரவு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை குறித்த விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்ட சட்டமா அதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட நிலையில் குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய குறித்த அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என குறித்த பி.சி.ஆர் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.