பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் தடுப்பூசி கிடைக்கும் என நம்புகிறோம் : அமைச்சர் ஜெயசுமான

பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியைக் நாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக மருந்துகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமான தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் சீனாவின் மொடர்னா, ஃபைசர் தடுப்பூசிகளை அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

“நாங்கள் ஏற்கனவே சீனா மற்றும் ரஷ்ய அரசுகளுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளோம். ஒரு தடுப்பூசி கிடைத்ததும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தவுடன் பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் அதைப் பெறுவோம் என நம்புவதாக பேராசிரியர் ஜெயசுமான தெரிவித்தார்.

தடுப்பூசி விநியோகத்துக்குத் தேவையான அடிப்படை வேலைகளைச் செய்ய உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து உதவி பெறுவதற்காக கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.