37 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை : 74 சதவீதமானோர் மேல் மாகாணத்தில்

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 37 000 ஐ கடந்துள்ளது. இதே வேளை 28 000 இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாளாந்தம் சுமார் 17 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் மொத்த தொற்றாளர்களில் 74 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மேல் மாகாணத்திலும் கொழும்பு மாவட்டம் குறிப்பாக கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகள் தொடர்ந்தும் அபாயம் மிக்க பகுதிகளாகவே சுகாதார தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் வெளிப்பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் பிரதேச பொது சுகாதார அதிகாரியின் எழுத்து மூல அனுமதியை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நாடளவிய ரீதியில் 9 பொலிஸ் பிரிவுகளும் , 61 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை 146 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 37 407 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 28 682 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 8549 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை 438 நபர்கள் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா வருவோருக்கு அறிவித்தல்

வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் அவர்களது பிரதேச பொது சுகாதார அதிகாரியின் எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றுவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸானது குளிர் காலநிலைக்கு பரவக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் என்பதனால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நுவரெலிய நகர மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி நுவரெலியா நகருக்கு வருகின்றவர்கள் ஒருபோதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த எழுத்து மூல அனுமதி இல்லாத எந்தவொரு நபருக்கும் நுவரெலியாவில் எந்தவொரு ஹோட்டல்களிலும் தங்குமிடம் வழங்கப்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக நுவரலியா மாநகரசபையின் மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று பதிவான மரணங்கள்

பனாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆணொருவர் பிம்புர ஆதார வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இரத்தம் நஞ்சானமை மற்றும் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 8 ஐ சேர்ந்த 52 வயதுடைய ஆணொருவர் கடந்த 17 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 ஐ சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை இனங்காணப்பட்டதையடுத்து பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதினால் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமை மற்றும் புற்றுநோய் நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 44 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து வெலிசரை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அந்த வைத்தியசாலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நோய் நிலைமையாகும்.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஆணொருவர் கடந்த 19 ஆம் திகதி ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதையடுத்து ஏற்பட்ட மார்பு தொற்று நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 பொலிஸ் பிரிவுகள் , 61 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்

நாடளாவிய ரீதியிலுள்ள 9 மாவட்டங்களில் 9 பொலிஸ் பிரிவுகளும் 61 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகள் , 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் ஒரு தொடர்மாடி குடியிருப்பு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹாவில் 12 கிராம சேவகர் பிரிவுகளும் , ஒரு வீட்டுத்திட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறையில் 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , கண்டியில் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், அம்பாறையில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மாத்தறையில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், காலியில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், இரத்தினபுரியில் 1 கிராம உத்தியோகத்தர் பிரிவும் , மொனராகலையில் 1 கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகளில் அதிக தொற்றாளர்கள்

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 253 பேர் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டவர்களாவர். இவர்களில் 222 தொற்றாளர்கள் கொழும்பு 2 – 15 இற்கு இடைப்பட்ட கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடையும் பயணிகளுக்கு புதிய தனிமைப்படுத்தல் நடவடிக்கை – சுதர்ஷினி

விமான நிலையத்தில் வழமையான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் நாட்டை வந்தடையும் பிரயாணிகளை 2 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பணிப்புரை விடுத்துள்ளார்.

யோசனை முன்வைக்கப்பட்டது : இந்தியாவிற்கு வழங்குவதற்கு அல்ல – ரோஹித அபேகுணவர்தன

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டதே தவிர அதனை இந்தியாவுக்கு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவில்லை என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

யாழ். மருதனார்மடம் கொத்தணியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

யாழ்.மருதனார்மடம் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

37 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை : 74 சதவீதமானோர் மேல் மாகாணத்தில்

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 37 000 ஐ கடந்துள்ளது. இதே வேளை 28 000 இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போ நாளாந்தம் சுமார் 17 மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில் மொத்த தொற்றாளர்களில் 74 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டால் மீண்டும் ஜீ.எஸ்.பி. நீக்கப்படக்கூடும் – ஜே.சி.அலவத்துவல

ஜெனீவா கூட்டத்தொடரில் மீண்டும் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்பட்டால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை உள்ளிட்டவை மீண்டும் இல்லாமலாக்கப்படக் கூடும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் நாடு பொருளாதார ரீதியிலும் ஏனைய துறைகளிலும் பாரிய வீழ்ச்சியடையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்