அரசாங்கத்தின் உத்தரவுகளோடு மக்களை ஏமாற்றிய வங்கிகள்?

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட இலகு வட்டியின் கீழ் பண்டிகை கடனை, அதிகளவான அரச, தனியார் மற்றும் சுய தொழில் ஊழியர்களினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

பண்டிகை காலப்பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்களின் கடன் கனவு கலைந்து விட்டதாக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நூற்றுக்கு 0.625 என்ற மாதாந்த வட்டியின் கீழ் 10 மாதங்களில் செலுத்தும் வகையில் இந்த கடன் வசதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் அலுவலக பிரதானிகளின் உறுதி கடிதம் பெற்றால் வங்கி கணக்கிற்கு பணம் கிடைக்கும் என கூறப்பட்டது.

எனினும் கடன் வழங்கும் போது வங்கிகள் பல்வேறு நிபந்தணைகளை முன்வைத்துள்ளது. அதற்கமைய அரச ஊழியர் ஒருவர் இன்னும் ஒருவருக்கு பிணை கையொப்பமிட்டிருந்தாலும் அந்த கடனை கடனை பெற முடியாது. இதனால் நூற்றுக்கு 10 வீதமான அரச ஊழியர்கள் கூட கடன் பணத்தை பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சுயதொழில் செய்யும் ஊழியர்கள் தங்கள் வருமான முறையை உறுதி செய்யும் சான்றிதழ் வைத்திருத்தல் உட்பட பல்வேறு நிபந்தணைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்றவர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி கடன் பெறலாம் என சுற்றறிக்கையில் குறிப்பிட்ட போதிலும் வங்கிகள் அதனை மீறி நிபந்தனைகள் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு கடன் வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு ஏமாற்றம் அடையச் செய்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளளனர்.

அதற்கு பதிலாக ஒவ்வொரு வருடமும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவை வழங்கியிருந்தால் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.