இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி.. அவுஸ்திரேலிய அணி 195 ஓட்டங்களில் சுருண்டது

மெல்பேர்னில் இந்தியா –அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2ஆவது போட்டி இன்று நடைபெற்றன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துதது.

ஆரம்பம் முதல் நிதான ஆட்டத்தை அவுஸ்திரேலிய அணி வெளிபடுத்திய போதிலும், இந்திய வீரர்களின் கட்டு கோப்பான பந்துவீச்சால் ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. சீரான இடைவெளியில் அடுத்தடுக்கு விக்கெட்டுகள் சரிந்தபடியே இருந்தன

தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ், முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மீத் ஆகியோர் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்கவே, முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 195 ஓட்டங்களில் சுருண்டது.