அம்பாறை காரைதீவில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

உலகை உலுக்கிய சுனாமி பேரனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 16 வருடமாகின்றது. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாளாக மக்கள் மத்தியில் பதிந்துள்ளது.

இதற்கமைய, அம்பாறை மாவட்டம் காரைதீவு கடற்கரையில் சுனாமி நினைவுதூபி அமைந்துள்ள பகுதியில் சனிக்கிழமை (26.12.2020) 16 ஆவது சுனாமிநினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு உப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீனவர் சங்கத்தினர் ஆலய தலைவர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த சுனாமி நினைவுதின நிகழ்வுகள் சுகாதார நெறிமுறைக்கிணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இறந்தவர்களுக்கு ஆத்ம அஞ்சலியும் பிரார்த்தனையும் நடை பெற்றன.

இலங்கையில் அதிகூடிய பாதிப்பைச்சந்தித்தது அம்பாறை மாவட்டமாகும். அங்கு 10, 000 மேற்பட்டோர் பலியானார்கள். அதிலும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது காரைதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகள் மிகவும் கூடுதலான பாதிப்பை சந்தித்தன.