வவுனியா மரக்கறி சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு இரண்டாம் கட்டமாக இன்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா தொற்றிற்குள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில் பல்வேறு தரப்பினருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வவுனியா மொத்த விற்பனை சந்தையில் பணிபுரியும் நூற்றிற்கும் மேற்பட்ட பணியாளர்களிற்கு கடந்தவாரம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
எனினும் அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் வவுனியா மரக்கறிச்சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு இன்றையதினம் இரண்டாம் கட்டமாகச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.