பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள்-பிரதமர் பகிரங்க அறிவிப்பு

புதிய கொரோனா தொற்று கட்டுப்பாடுகளின்போது அத்தியாவசிய காரணங்களை தவிர பொது மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புதிய கட்டுப்பாடுகள் பெப்ரவரி மாதம் நடுப்பகுதி வரையில் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றிரவு பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிட்ட விசேட அறிவிப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனைத்து பாடசாலைகளும், கல்லூரிகளும் பெரும்பாலான மாணவர்களுக்கு மூடப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் தொலைநிலைக் கற்றலுக்கு மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் வாரங்கள் மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையில் இன்னும் கடினமான நிலை ஏற்படக் கூடும் என பிரதமர் தனது அறிவிப்பின் போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய நடவடிக்கைகள் அனைத்தும் பெப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும். ஏனெனில் வைரஸின் புதிய தொற்று மாறுபாடு பிரித்தானியா முழுவதும் பரவுகிறது.

நாடு “போராட்டத்தின் கடைசி கட்டத்திற்குள்” நுழைகிறது என்று தான் நம்புவதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

வைத்தியசாலைகள் “தொற்றுநோய் தொடங்கியதில் இருந்ததை விட தற்போது அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள” என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே, அத்தியாவசிய காரணங்களை தவிர பொது மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, புதிய விதிகளை விரிவாகக் கூறும் 22 பக்க ஆவணத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள்! இரவு 8 மணிக்கு வெளியாகும் பிரதமரின் அறிவிப்பு

பிரித்தானியாவிற்கான புதிய தேசிய கட்டுப்பாடுகளின் தொகுப்பை மார்ச் பூட்டுதலுக்கு ஒத்ததாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்றிரவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது புதிய விதிகளை நள்ளிரவு முதல் பின்பற்றுமாறு பிரதமர் பொதுமக்களை வலியுறுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லப்படுவார்கள் என்றும் பெரும்பாலான மாணவர்களுக்கு பாடசாலைகள் மூடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் எப்போது மதிப்பாய்வு செய்யப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவிற்கான கொரோனா கட்டுப்பாட்டு திட்டங்களை வகுப்பார்.

ஏனெனில் பிரித்தானியாவின் பகிர்ந்தளிக்கப்பட்ட நாடுகளுக்கு தங்களது சொந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை அமைக்கும் அதிகாரம் உள்ளது.

ஸ்காட்லாந்தோடு, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் தேசிய கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தியுள்ளன.

பிரித்தானியாவில் இன்று தொடர்ச்சியாக ஏழாவது நாளாக 50,000க்கும் மேற்பட்ட புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

“இந்த உயர்வைக் கட்டுப்படுத்தவும், NHS பாதுகாப்பதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் இப்போது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் எண்ணமாகவுள்ளது.” என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு – முதலில் கென்டில் அடையாளம் காணப்பட்டது. பிரித்தானியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் காணப்பட்டது.

இது முந்தைய மாறுபாடுகளை விட மிக எளிதாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தாங்கள் “தீவிர அழுத்தத்தில்” இருப்பதாகக் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா முழுவதும் அறக்கட்டளைகள் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அங்குள்ள மிக மூத்த மருத்துவர்களில் ஒருவர் வார இறுதியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பிரித்தானியா மருத்துவமனைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 2020 வசந்த காலத்தில் காணப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.