ராஜபக்ச அரசுக்கு சவால் விடும்-சஜித்.ரணில்

எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

“பொய்களைத் தோற்கடித்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் மறுசீரமைப்பு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது – நாட்டு மக்களின் நலன் கருதி எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து செயற்படுவதன் சாத்தியங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதென அவர் தெரிவித்தார்.