இரண்டு பக்கமும் குள்ள நரி இடையினிலே ஒரு கள்ள நரி 

இரண்டு பக்கமும் குள்ள நரி இடையினிலே ஒரு கள்ள நரி 

கெட்டுக் கீழ் நிலை அடைகிறது
செத்துப் போன தமிழர் விதி

வென்று விட்டான் சிங்களவன் வீழ்ந்து விட்டான் செந்தமிழன்  நக்கிப்பிழைக்கும் நாய்க் கூட்டம் நடுத்தெருவில் நம் சனக்கூட்டம்.

நல்ல நிலையில் பகைவன் வளக்கும் நம் ஊரு கறுப்பாடுகள் இவை நாட்டுக்கும் வீட்டிற்கும் பெருங் கேடுகள் 

நேற்று எங்கள் பாரதி நேரில் இதனை பார்த்தவன் என்ன செய்வாய் கொடு விதியே என்று  விதியிடமே பதில் கேட்டவன்

கண்ணைக் குத்த நகங்கள்
இரண்டு கையில் உள்ளதடா
இதை கருத்தில் கொள்ள
மறுத்தால்  நிலை
என்ன ஆவதடா

முள்ளில் பட்டுச் சேலை
மெல்லக் கிளியும் வேளை
மூச்சடங்கிப் போய்விடுமா
பருத்திச் செடியின் வாழ்கை.

தறியில் நெய்த பட்டு
கயவர் உடலில் பட்டு
கயங்கி சுருங்கிப்போனாலும்
கந்தை நூலும் பட்டு.

கதிர்கள் பட்டு பனித்துளி
காணமல் போகையிலே
வலியில் துடித்து அழுதிடுமா
வானத்தில் வெண்மதி

அறிவில் சிறந்து விளங்கு
ஆற்ரல் கொண்ட தமிழா
பதரை நீக்கி விளைவை
படையல் செய்யடா அதை
விரைவில் செய்யடா.

புதுவைதாசன்

          மதி

முல்லைமதி