இந்திய வெளியுறவு அமைச்சர் வெளியேறி 48 மணி நேரத்திற்குள்.. இலங்கை அரசுக்கு திமிர் தலைக்கு ஏறி உள்ளது! வைகோ

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இரவு இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை பெரும்பான்மையின அரசு செய்துள்ளது.

இந்திய அரசு, பெரும்பான்மையின அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.