யாழ்.பல்கலையில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி- தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான அத்திவாரம் வெட்டும்பணி இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த நினைவு தூபிக்கான அத்திவாரம் வெட்டும் நிகழ்வு இன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 8 ஆம் திகதி இரவோடிரவாக பல்கலைக்கழ நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்ட இந்த நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று அதற்கான அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.