யாழ்ப்பாண யுவதிகள் இருவர் பிரான்ஸில் படுகொலை

பிரான்ஸில் மருத்துவ பட்டப்படிப்பை மேற்கொண்டுவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் அவர்களது காதலர்களான இலங்கை தமிழ் இளைஞர்கள் இருவரால் கொலை செய்யப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பகுதியில் வசித்து வரும் செல்லத்துரை குலேந்திரா தம்பதியினரின் மகளான கார்த்திகா கடந்த எட்டாம் திகதி கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சொந்த இடமாகவும் பிரான்ஸில் வசித்து வந்தவருமான சந்திரராசா என்பவரின் மகளான சினேகா கடந்த 13ஆம் திகதி அன்று கொலை செய்யப்பட்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

குறித்த யுவதியின் கழுத்தை நெரித்து, அவரது காதலன் கொலை செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கொலைச் சம்பவங்கள் காதல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையை செய்த இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது.

சந்தேகநபர்களின் புகைப்படங்களை பிரான்ஸ் பொலிஸார், குறித்த யுவதிகள் தங்கியிருந்த இடத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.