சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி! வைத்தியசாலை அறிக்கை வெளியானது

பெங்களூரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சசிக்கலாவிற்கு திடீரென நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிக்கலாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று காலை ஏற்பட்ட மூச்சுத்திணறலை அடுத்து பெங்களூருவில் உள்ள பவுரிங் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை வெளியான வைத்தியசாலை அறிக்கையில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது.

நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை’’ என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.