ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அருண தீபால் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் களுத்துறை மாவாட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அருண தீபால் நேற்று (21.01.2021) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான அருண தீபால் ஹொரான தொகுதி ஐக்கிய தேசிய கட்சி பிரதான அமைப்பாளராகவும் இருந்தார்.

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.