கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் இலங்கையில் பிறந்த நபர்

இலங்கையில் பிறந்த சமத் பலிஹபிட்டிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆளுநர் பதவிக்கு போட்டியிட தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கலிபோர்னியா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் கெவின் நியூசம்மின் ஆட்சியில் மாநிலம் நரகமாக மாறியுள்ளதாகவும் கல்வி கட்டம் குறைந்து வாழ்க்கை செலவு அதிகரித்து, ஆசிரியர்களுக்கு குறைந்தளவு சம்பளமே வழங்கப்படுவதாகவும் சமத் பலிஹபிட்டிய ஆரம்பித்துள்ள புதிய பிரச்சார இணைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வர முதலீட்டாளரான 39 வயதான சமத் பலிஹபிட்டிய தனது பெற்றோருடன் இலங்கையில் இருந்து சென்று கனடாவில் குடியேறியுள்ளார்.

சிறிய வயதில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்கையில் வெற்றி பெற்று தற்போது அமெரிக்காவில் கெப்பிட்டல் ட்ரஸ்ட் உட்பட பல நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருப்பதுடன் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.