சுயநலத்தில் நஞ்சூறிய விலங்குகளைப் போன்று சமூக புரிதலற்ற பிறவிகளே உங்களைப் போன்ற சுயநலத்தினால் தான் இந்த சமூகமே சீரழிகின்றது?

வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் தினமும் பாடசாலை வளாகத்திற்குச் சென்றதும் உளநெருக்கடிக்கு உள்ளாக்கப் படுவதாக அறியக்கிடைத்தது.

குறித்த ஆசிரியை நீண்ட தூரம் பஸ்ஸில் பயணித்து பாடசாலை வருவதுடன் வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்பிப்பதாகவும். அவரை தினமும் வகுப்பறையை விட்டு யாருமற்ற இடத்தில் தனிமைப் படுத்தும் படி ஏனைய ஆசிரியர்களால் உளத்துன்புறுத்துதலுக்குள்ளாக்கப் பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இவ் விடயம் தொடர்பில் குறித்த பாடசாலையில் பணிபுரியும் அதிபர். நிர்வாகத்தினர். கல்வித்திணைக்களம் மற்றும் பொருத்தமானவர்களிடம் கேட்க விரும்புவது

வவுனியா இறம்பைக்குளம் ம.ம.வித்தியாலயத்தில் குறித்த ஆசிரியையைத் தவிர வேறு எந்த ஆசிரியையும் பொதுப் போக்கு வரத்தில் பயணிப்பதில்லையா?

மாணவர்கள் எவரும் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதில்லையா?

கொரோணா பிரச்சனை க்கு குறித்த ஆசிரியர் மட்டும் தான் காவியும் கடத்தலுமா?

கொரோணா கால சுகாதார நடைமுறையை குறித்த ஆசிரியை பேணவில்லையா?

மனித மனங்களையும் விழுமியங்களையும் புரிந்து கொள்ளாதவர்கள் தான் அப் பாடசாலையின் ஆசிரிய அறிவாளிகளா?

இக்கேள்விக்கு அவசியம் பதில் வேண்டும்.
ஏனெனில்

அண்மையில் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய மகனைத் தனிமைப்படுத்திய நிலையில் அயலவர்களின் வன்மம் நிறைந்த கொடூர வார்த்தைகளால் ஓர் ஆசிரியை தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.

எல்லோரும் கண்ணீர் அஞ்சலி போட்டார்கள். அந்த கொலைக்குற்றவாளிகளை யார் கண்டு பிடித்தனர்?
என்ன தண்டனை கொடுத்தனர்?

சுயநலத்தில் நஞ்சூறிய விலங்குகளைப் போன்று சமூக புரிதலற்ற பிறவிகளே உங்களைப் போன்ற சுயநலத்தினால் தான் இந்த சமூகமே சீரழிகின்றது?

உங்களைப் போன்ற கொடூர சமூகத்தினரால் தான் இளம் பெண்கள்
பல்கலை மாணவர்கள் ஏன் வைத்தியர் கூட அண்மைக்காலத்தில் தம்மைத்தாமே மாய்த்துக்கொண்டனர். எல்லாம் பிணந்தின்னி பேய் மனங்களின் கோரமுகங்கள் தான்.இந்நிலைக்குக் காரணம்.

எனவே குறித்த ஆசிரியைக்கு உளநெருக்கடிநிலை தொடரும் நிலையில் பின் விளைவுகளுக்கு இப் பாடசாலையும் கல்விச் சமூகமும் பொறுப்புக் கூறவேண்டிய நிலை ஏற்படும்.