மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேசச் செயலகம் உருவாக்குவது தொடர்பான முன் மொழிவு கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவொன்றை அமைப்பது சம்பந்தமாக எடுக்கும் தீர்மானத்தின் முன்மொழிவை தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் உயர் மட்ட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மாலை  மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான  காதர் மஸ்தான் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன், மற்றும்    பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவை அமைப்பது   தீர்மானத்தின் முன்மொழிவை பெற்றுக்கொள்ளப்பட்டு தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.