சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியமை மற்றும் விபத்தைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

எனினும் ரணவக்கவுக்காக முன்னிலையான சட்டத்தரணி, இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேல் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிட்டார். இந்தநிலையில் சமர்ப்பிப்புகளைக் செவிமடுத்த பின்னர், ஏப்ரல் 27 ம் திகதி பூர்வாங்க ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.