கிண்ணியாவிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான நிலம் அடையாளம்

கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா மகரூப் கிராமம் (மாகாமாறு) என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கும் மையவாடியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இடத்தைப் பார்வையிடுவதற்காக இன்று (05) திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். பிரேமாநந் உள்ளிட்ட அடங்கிய குழுவினர் விஜயம் செய்திருந்தார்கள்.

இதில்  கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹார், உறுப்பினர் நஸீர் உட்பட பலர் பங்கேற்றனர்.