கூட்டமைப்பின் இரட்டை வேடம் அம்பலம்!ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட போலி அறிக்கையில் இரகசியம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் அங்கத்துவ கட்சியைச் சார்ந்த எவரும் கையொப்பமிடவில்லையெனவும், அவை கூட்டமைப்பின் போலி அறிக்கையாகவே கருதப்படுமெனவும் ரெலோ அமைப்பின் ஊடக பேச்சாளரும், முகாமைத்துவ ஆலோசகருமான சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் கட்சியின் தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் தலைவர்கள் கையொப்பமிடாமையினால் கூட்டமைப்பின் அறிக்கையாகவே கருத முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த அறிக்கைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே பொறுப்பு கூறவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.