உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை விவாதம் மீண்டும் அடுத்த வாரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பற்றிய விவாதம் பாராளுமன்றில் அடுத்த வாரம் மீண்டும் தொடரவுள்ளது.

அதன்படி இந்த விவாதம் மார்ச் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ உறுதிபடுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கடந்த 10 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.