சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பிய !கண்ணியா வெந்நீரூற்று வழக்கு முடிவுக்கு வந்தது

சர்ச்சைக்குரிய கண்ணியா வெந்நீரூற்று வழக்கு சமாதான உடன்படிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்து கோயில் கட்டுவதற்கு உடன்பாடு, உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் தொல்பொருள் தூபி என்றழைக்கப்படும் பகுதி பாதுகாக்கப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கண்ணியா வெந்நீரூற்று பகுதியில் விகாரை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பட்டங்களை தடை செய்யும்போது நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றினால் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்ட்டிருந்தன.

நேற்றைய தினம் குறிக்கப்பட்ட சமாதான உடன்படிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த உடன்படிக்கையில் தொல்பொருள் ஆணையாளர் பேராசிரியர் மனதுங்க, திருகோணமலை அரச அதிபர், மனுதாரர் கோகிலரமணி, மனுதாரரின் சட்டத்தரணி மற்றும் அரச சட்டவாதி ஆகியோர் கையொப்பமிட்ட உடன்படிக்கையைத் தாக்கல் செய்து அரச சட்டவாதி ஜெயந்தி சாருக்க எக்கநாயக்க நீதிமன்றில் சமாதான உடன்படிக்கையை ஒப்புக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரியுள்ளார்.

சட்டதரணி சயந்தன் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டதாக அறிவித்ததை அடுத்து, இந்து கோயில் கட்டுவதற்கான அனுமதியும், தொல்பொருள் சார்ந்த பௌத்த தூபி பாதுகாக்கப்படும் என்ற அனுமதியும் உடன்படிக்கையில் முக்கிய இடத்தை பெற்றதை அடுத்து இரு சாராரும் முன்வைத்த கோரிக்கையை அடுத்து நீதிபதி இளஞ்செழியன் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.