வெனிசுலாவின் எரிவாயு ஆலையை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

வெனிசுலா மாநிலமான மோனகாஸின் எல் டெஜெரோ நகரில் அமைந்துள்ள எரிவாயு ஆலையின் குழாயில் ஒரு பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்பு பயங்கரவாத செயலாக கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடி விபத்தினால் தற்சமயம் வரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், எரிவாயு குழாய் இணைப்புக்கு அருகிலுள்ள பகுதியில் வசிப்பவர்களை குறித்த இடத்தை விட்டு கட்டாயம் காலி செய்யுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அந் நாட்டு பெற்றோலிய அமைச்சர் தாரெக் எல் ஐசாமி இந்த சம்பவத்தை கண்டித்துடன், தாக்குதல் பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விவரித்தார்,

பலியானவர்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் இல்லை என்றும் கூறிய அவர், வெடிப்பின் தாக்கத்தைத் தணிக்க அதிகாரிகள் அந்தப் பகுதியில் தேவையான அனைத்துப் படைகளையும் நிறுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.