வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களுக்கு விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் விமான நிலையங்களில் உள்ள தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இரு நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தால் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.

விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபையின் இணையத்தளம் ஊடாக பதிவு செய்து விமான நிலையங்களில் உள்ள தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்களில் அனைத்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடீயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் அறிந்து கொள்வதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

011 22263017 என்ற இலக்கம் ஊடாக இந்த தகவல் அறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.