இந்தோனேசியாவின் மக்காசர் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
உலகளாவிய கிறிஸ்தவர்கள் இன்றையதினம் குருத்தோலை ஞாயிறு தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள மக்காசர் பகுதியில் உள்ள பெரிய கோவிலில் குருத்தோலை ஞாயிறுதின ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகம் தேவாலயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டர் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாகவும் ஆலயத்தின் பிரதான வாயில் அருகே குண்டு வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் நாம் ஆராதனைகளை நிறைவுசெய்த நிலையில், மக்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்றுகொண்டிருக்கையிலேயே குறித்த தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றதாக தேவலயத்தின் பங்குத் தந்தை குறிப்பிட்டுள்ளார்.