சிறீலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளரின் அறிக்கையின் முழு விபரம்

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறும், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான எந்தச் சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களின் கடப்பாடுகளுக்கு முற்றிலும் அமைவாக இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கை அரசிடம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை மற்றும் உயர் ஆணையாளர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரின் அலுவலகத்தின் அறிக்கைகள் வேண்டுகோள்விடுத்துள்ளன.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

அல்பேனியா, அவுஸ்ரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம்,பல்கேரியா, கனடா, குரேசியா,சைப்பிரஸ்,செச்சினியா, டென்மார்க், ஈஸ்டோனியா, பின்லாந்து,பிரான்ஸ், ஜேர்மனி, கிறீஸ், ஐஸ்லாந்து,அயர்லாந்து, இத்தாலி, லட்வியா, லிச்சென்ஸ்ரின்,லித்துவேனியா, லக்சம்பேர்க், மலாவி, மல்ரா,மார்சல் ஐலன்ட்ஸ், மொண்டி நீக்குறோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, வட மசடோனியா,நோர்வே, போலந்து, போத்துக்கல், றோமேனழயா, சான் மரினோ, சிலோவாக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின், சுவீடன், சுரிட்சர்லாந்து, பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தைக் கொண்ட ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசு வரைபுத் தீர்மானம்

46/1…. இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல்

மனித உரிமைப் பேரவை,

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கம், கொள்கைகள் என்பவற்றால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகள் குறித்த சர்வதேச பிரகடனத்தை மீள உறுதிசெய்து, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களையும், தொடர்புடைய ஏனைய சாசனங்களையும் நினைவிற்கொள்ளல்,

இலங்கையில் மீளிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் தொடர்பான மனித உரிமைப் பேரவையின் மார்ச் 22, 2012 இற்குரிய 19/2, மார்ச் 21, 2013 இற்குரிய 22/1, மார்ச் 27, 2014 இற்குரிய 25/1, ஒக்டோபர் 1, 2015 இற்குரிய 30/1, மார்ச் 23, 2017 க்குரிய 34/1 மற்றும் மார்ச் 21, 2019 க்குரிய 40/1 ஆகிய தீர்மானங்களை நினைவிற்கொள்ளல்,

27 மே 2009 இற்குரிய S11/1 அதனுடைய தீர்மானத்தில், அனைத்து இன மற்றும் மதக் குழுக்களின் இணக்கத்துடனும் அவற்றின் உரிமைகளுக்கு மதிப்பளித்தும் இலங்கையில் அரசியல் தீர்வொன்றையும் நீடித்திருக்கும் அமைதியையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுடனும்; விரிவான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாட்டை மனித உரிமைகள் பேரவை வரவேற்றதையும், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றின் மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு பொறுப்புக்கூறல் நடைமுறையின் அவசியத்தை வலியுறுத்தியமை உட்பட்ட பல விடயங்களை உள்ளடக்கிய இலங்கை ஜனாதிபதியும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் 2009 மே 26 ஆம் திகதி வெளியிட்ட கூட்டறிக்கையை ஒப்புதல்அளித்து மீள நினைவுபடுத்தல்.

இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான அதனுடைய கடப்பாட்டை மீள உறுதிசெய்தல், மனித உரிமைகளை நாட்டில் உள்ள அனைவரும் மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் முழுமையாக அனுபவிப்பதை உறுதி செய்யும் முதன்மையான பொறுப்பு அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கே உரியது என்பதையும் மீள உறுதிசெய்தல்.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் பெரும் எண்ணிக்கையானோருக்கு மரணத்தையும், காயங்களையும் ஏற்படுத்திய பயங்கரவாதச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்தல்,

சுதந்திரமானவையும், வெளிப்படைத் தன்மையுள்ளவையுமான ஜனநாயக தேர்தல்கள் 2019 ஆம் ஆண்டு நவம்பரிலும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டிலும் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளல், மனித உரிமைகள் சபையில் ஒரு உறுப்பினராக இல்லாத அரசு ஜனநாயக ஆட்சி, முக்கிய அமைப்புக்களின் செயற்பாடுகள் மீது சுதந்திரமான மேற்பார்வை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதேவேளையில், இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம்நிறைவேற்றப்பட்டதைக் கருத்திற்கொள்ளுதல்,

தனது அனைத்து மக்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கும் நல்லிணக்கத்திற்கும் முக்கியமானமாகவுள்ளஅரசியல் அதிகாரத்தைக் கொண்ட அதிகாரப் பரவலாக்கல் குறித்த தனது ஈடுபாட்டை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுவதுடன், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது உள்ளடங்கலாக உள்ளாட்சி அமைப்புக்களை மதிக்குமாறு அரசைஊக்குவித்து, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆம்திருத்தத்திற்கு அமைவாக வட கிழக்கு மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாணசபைகளும் செயற்திறனுடன் இயங்குவதை உறுதிசெய்யுமாறு ஊக்குவித்தல்,

இலங்கையர்கள் அனைவரும் மதம், நம்பிக்கை, இனம் போன்ற எவ்வித பாகுபாடுகளும் இன்றி, அமைதியான, ஒன்றுபட்ட நாட்டில் அவர்களது மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் உரிமை கொண்டவர்களென்பதை மீளஉறுதிசெய்தல்,

உட்கட்டுமானங்களை மீளக் கட்டியெழுப்புதல், கண்ணிவெடியகற்றல், காணிகளை மீள ஒப்படைத்தல், உள்நாட்டில் இடம்பெயர்க்கப்பட்டவர்களை மீளக் குடியரமர்த்துதல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு ஏற்றுக்கொண்டு, இந்த விடயங்களில் மேலதிக நடவடிக்கைககளை ஊக்குவித்தல்,

ஐக்கிய நாடுகள் அமைப்புடனும், மனித உரிமைகள் ஆணைகள் மற்றும் பொறிமுறைகள் போன்றன உள்ளடங்கலாக அதன் முகவர் அமைப்புக்களுடனும் ஈடுபாட்டைப் பேணுவதற்கும், ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவி, தொழில்நுட்ப உதவி போன்றவற்றைப் பெறுவதற்கும், நீடித்திருக்கும் அமைதியை அடைவதற்கும், இலங்கை அரசு தொடர்ந்து வெளிப்படுத்தும் உறுதிப்பாட்டை வரவேற்றல்,

ஏப்பிரல் 2019 இல் பெரும் எண்ணிக்iயான காயங்கள் மற்றும் இறப்புக்களை இலங்கையில் ஏற்படுத்தியவை உட்பட்ட அனைத்துப் பயங்கரவாதச் செயல்கள், வழிகள், நடைமுறைகள், மற்றும் பயங்கரவாதத்திற்கு உகந்த வன்முறையான தீவிரவாதம் ஆகியவற்றின் அனைத்து வடிவங்கள், நடைமுறைகள் ஆகியவை, அவை எங்கு, எவரால் புரியப்பட்டாலும், அவற்றின் நோக்கத்தைக் கருத்திற் கொள்ளாதும், பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் நிதி, பொருள் அல்லது அரசியல் ஆதரவும், உரிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நியாயப்படுத்தப்பட முடியாதவையென வெளிப்படையாக கண்டிப்பதை மீளவும் உறுதிப்படுத்தி, பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும், சர்வதேச சட்டங்களின் கீழ் நாடுகளுக்குள்ள கடப்பாடுகளுக்கு முற்றிலும் அமைவாகவும், குறிப்பாகப் பொருத்தமான சர்வதேச மனித உரிமைச் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாகவும் இருக்கவேண்டுமெனவும் மேலும் மீள உறுதிசெய்தல்,

கடந்த காலத்திற்கு – பொறுப்புக் கூறல், நீதி வழங்குதல், பாதிக்கப்பட்டோருக்குத் தீர்வு வழங்குதல், மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தவிர்த்தல், ஆற்றுகை, மீளிணக்கம் ஆகியவற்றை முன்னேற்றுதல் என்பவற்றை உறுதி செய்வதற்கு, நீதித்துறை சார்ந்த மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகளை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறை முக்கியமானதென வலியுறுத்தல்,

முன்னைய முறைகேடுகளுக்கும், மீறல்களுக்கும் தீர்வு வழங்குவதற்கான பொறிமுறைகள் அவை சுதந்திரமானவையாகவும், பக்கச்சார்பற்றவையாகவும், வெளிப்படைத்தன்மை உள்ளவையாகவும் இருக்கும்போதும்; பாதிக்கப்பட்டோர், பெண்கள், இளையோர், பல்வேறு மதங்களினதும், இனங்களினதும், பிராந்தியங்களினதும், ஓரங்கட்டப்பட்ட குழுக்களினதும் பிரதிநிதிகள் உட்பட்ட, சட்டத்தின் ஆட்சிக்கு அமைவாக, தொடர்புடைய அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களும் அறியப்படுவதை உள்ளடக்கிய கருத்தறியும் மற்றும் பங்குபற்றும் முறைகள் பயன்படுத்தப்படும்போதுமே சிறப்பாகச் செயற்படுமென்பதை வலியுறுத்தல்,

பொருத்தமான வகையில், மனித உரிமைச் சட்டத்தின் பாரதூரமான மீறல்கள், மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளடங்கலாக, மனிதஉரிமைச்சட்டம்மற்றும்சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றின் கடப்பாடுகளுக்கு அமைவாக நடந்து கொள்வது அரசுகளின் கடமையென்பதை மீளநினைவுபடுத்தல்,

இலங்கையில் மனித உரிமைகளையும், உண்மை, நீதி, மீளிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை முன்னேற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் ஆற்றிய பணியைப் பாராட்டுடன் கருத்திற்கொள்ளுதல்,

1.மனித உரிமைப் பேரவையின் நாற்பத்து மூன்றாவது கூட்டத்தொடரில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் சமர்ப்பித்த வாய்மொழி மூலமான புதிய தகவல்களையும், நாற்பத்து ஆறாவது கூட்டத்தொடரில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையையும் வரவேற்கின்றது,

2.இலங்கை அரசு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்துடனும் மனித உரிமைச் சபையின் விசேட நடவடிக்கைகளுடன் கொண்டுள்ள ஈடுபாட்டை வரவேற்று, அத்தகைய ஈடுபாட்டையும் பேச்சுக்களையும் தொடருமாறு கேட்டுக் கொள்வதுடன், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், மனித உரிமை நிபுணர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் விசேட நடவடிக்கைகளால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளுக்கு உரிய முறையில் கருத்திலெடுக்குமாறும் இலங்கை அரசிடம் கேட்டுக்கொள்கிறது,

3.காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியன அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு ஏற்றுக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட நலிவடைந்த குடும்பங்களுக்கு பால்ரீதியில் கவனம் செலுத்தி இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பல சம்பவங்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்குள்ளார்கள் என்ற விடயத்தைக் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அறியச் செய்வதற்காகவும் இந்த அலுவலகங்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து பேணுவதன் முக்கியத்துவத்தையும், அவற்றின் சுதந்திரமான, செயற்திறனுள்ள செயற்பாட்டை உறுதிசெய்து, இரண்டு அலுவலகங்களும் அவற்றின் பணிகளைச் செய்வதற்குப் போதுமான வளங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றது,

4.2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் வெளியிடப்பட்ட இலங்கை குறித்த உயர் ஆணையாளரின் அலுவலகத்தின் விரிவான அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டவாறு, தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்த மீறல்கள் உட்பட, இலங்கையில் அனைத்துத் தரப்பினராலும் புரியப்பட்ட அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் பொறுப்புக் கூறுவதற்கான முழுமையான பொறிமுறையின் முக்கியத்துவதை வலியுறுத்துகிறது,

5.பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்ச்சியாக போதாமல் இருத்தல், 2021 ஜனவரி 22 அன்று அறிவிக்கப்பட்ட உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுவுக்குச் சுதந்திரம் இல்லாமை, முன்னைய ஆணைக்குழுக்களினதும், சபைகளினதும் அறிக்கைகளை மீளாய்வு செய்வதே அதனுடைய முக்கியகடைமையாக இருப்பதும், கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மோசமான மீறல்களுக்கும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான ஆணையை கொண்டிருக்காமல் இருப்பதையும் கருத்திற்கொள்கிறது

6.பொறுப்புக்கூறலை முன்னேற்றும் நோக்கத்துடன், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்மற்றும் அத்துமீறல்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் என்பன தொடர்பான சான்றுகளைப் பாதுகாப்பது, பகுப்பாய்வு செய்வது என்பவற்றின் முக்கியத்துவதை ஏற்றுக்கொள்கிறது, இது தொடர்பில் தகவல்களையும் சான்றுகளையும் சேகரித்து திரட்டி, பகுப்பாய்வு செய்து பாதுகாப்பதற்கும், பாரிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றின் பொறுப்புக்கூறலுக்கான எதிர்காலத் திட்டங்களுக்கான சாத்தியமான மூலோபாயங்களைத் தயாரிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உயிர்பிழைத்தோருக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கும், உரிய நியாயாதிக்கத்தைக் கொண்ட உறுப்பு நாடுகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், உயர் ஆணையாளரின் அலுவலகத்தின் ஆற்றலைப் பலப்படுத்துவதற்கு தீர்மானிக்கின்றது,

7.குடிசார் அரச செயற்பாடுகளில் இராணுவ மயமாக்கம் அதிகரித்தல், நீதித்துறையினதும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான முக்கிய அமைப்புக்களினதும் சுதந்திரம் பாதிப்படைந்து, ‘அடையாளச் சின்னங்களான’ சம்பவங்களில் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலை தொடர்வதும், அவற்றுக்குக் பொறுப்புக் கூறப்படுவதைத் தடுக்கும் தொடர்ந்த அரசியல் தலையீடுகளும், மதம், நம்பிக்கை ஆகியன தொடர்பான சுதந்திரத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் கொள்கைகளும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் அதிக அளவில் ஓரங்கட்டப்படுவதும், குடிசார் சமூகத்தின் மீதான கண்காணிப்பும் மிரட்டலும், ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதும், குறுகிச் செல்லும் ஜனநாயக இடைவெளியும், நினைவுச் சின்னம் ஒன்று அழிக்கப்பட்டமை உட்படப் போரில் பாதிக்கப்பட்டவர்களைப் பகிரங்கமாக நினைவேந்தல் மீதான கட்டுப்பாடுகளும் தான்தோன்றித்தனமாகத் தடுத்து வைத்தலும், சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற குரூரமான செயல்களும், பாலியல் அல்லது பாலினம்சார் வன்முறையும் குறித்த குற்றச்சாட்டுக்களும் உள்ளடங்கலாக இலங்கையில் மனித உரிமை நிலைமை மோசமடைந்து செல்வதைத் தெளிவாகப் பிரதிபலிக்கும் வகையில் கடந்த ஒரு வருட காலத்தில் நிலவும் போக்குகள் குறித்தும், இந்தப் போக்குகள் அண்மைய ஆண்டுகளில்எட்டப்பட்ட- குறைந் தஅளவானவையாகஇருந்தாலும் முக்கியமானவையான -முன்னேற்றங்களைப் பின்னடையச் செய்யும் ஆபத்துக்குள்ளாக்குவதுடன், முன்னைய காலத்தில் பாரதூரமான மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகளும், வழக்கங்களும் மீண்டும் உருவாகுவதற்கும் வழிவகுக்குமென ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றது,

8.கோவிட் வைரஸ் தொற்று நோய்க்கு (கோவிட்-19) எதிரான நடவடிக்கையானது மதம் அல்லது நம்பிக்கை குறித்த சுதந்திரத்தைப் பாதித்ததுடன், முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொள்ளும் ஒதுக்கிவைக்கப்படும் மற்றும் பாகுபாட்டுடன் நடத்தப்படும் நிலைமையை மோசமாக்கியுள்ளதெனவும், கோவிட்-19 காரணமாக மரணமான அனைவரையும் தகனம் செய்வது முஸ்லிம்களும், ஏனைய மதங்களைச் சேர்ந்தோரும் அடக்கம் செய்தல் தொடர்பான அவர்களது மதச் சடங்குகளைக் கடைப்பிடிப்பதைத் தடுத்துள்ளதுடன், சிறுபான்மை மதத்தினரை அளவுக்கு அதிகமாகப் பாதித்ததுடன் துன்பத்தையும், பதட்டத்தையும் அதிகரித்துள்ளதாகவும் மேலும் கரிசனையை வெளிப்படுத்துகிறது,

9.நீண்டகாலமாகத் தீர்வு வழங்கப்படாதுள்ள, முக்கிய வழக்குகள் உட்பட, பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்கள்குறித்தும்உடனடியான, முழுமையான, பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதி செய்து, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசிற்கு அழைப்பு விடுக்கின்றது,

10. மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பன அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணைகளை கூறப்பட்டவாறு நிறைவேற்றுவதற்குச் செயற்திறனுடனும், சுதந்திரமாகவும் செயற்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசிற்கு அழைப்பு விடுக்கின்றது,

11. மேலும், சட்டத்தின் ஆட்சிக்கும் மனித உரிமைகளுக்கும் உரிய மதிப்பளித்து மனித உரிமைப் பாதுகாவலர்கள் உட்பட, குடிசார் சமூக செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்குமாறும், அவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யுமாறும், இடையூறுகள், பாதுகாப்பின்மை, கண்காணிப்பு, பழிவாங்கலுக்கான அச்சுறுத்தல் என்பன இல்லாமல் குடிசார் சமூகம் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு உகந்ததும், பாதுகாப்பானதுமான சூழலை ஏற்படுத்துமாறும் இலங்கை அரசிற்கு மேலும் அழைப்புவிடுக்கிறது,

12. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறும், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான எந்தச் சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களின் கடப்பாடுகளுக்கு முற்றிலும் அமைவாக இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கை அரசிடம் வேண்டுகோள்விடுக்கிறது,

13. அனைத்து மதத்தினரும், அவர்களது மத போதனைகளைப் பின்பற்றுவதற்கான ஆற்றலை ஊக்குவிப்பதன் மூலம் மதச் சுதந்திரத்தையும், பன்மைத்துவத்தையும் வளர்ப்பதுடன், அவர்கள் சமத்துவமான நிலையில் சமூகத்திற்கு வெளிப்படையாகப் பங்களிக்க உதவுமாறு இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறது,

14. மனித உரிமை பேரவையின் விசேட நடைமுறைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைக்குமாறும், அவர்கள் ஏற்கனவே சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்குமாறும் இலங்கை அரசை ஊக்குவிக்கின்றது,

15. இலங்கை அரசுடன் கலந்தாலோசித்தும், அதன் ஒத்திசைவுடனும் மேற்குறித்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கியநாடுகள்உயர் ஆணையாளரின் அலுவலகத்தையும், உரிய சிறப்புச் செயற்பாடுகளுக்கான ஆணையை கொண்டிருப்பவர்களையும் ஊக்குவிக்கிறது,

16.மீளிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முன்னேற்றம் உள்ளடங்கலாக, இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த கண்காணிப்பையும், அறிக்கையிடலையும் அதிகப்படுத்துமாறும், மனித உரிமைப்பேரவையின் நாற்பத்துஒன்பதாவதுகூட்டத்தொடரில் எழுத்துமூலமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும், பொறுப்புக்கூறலுக்கான மேலதிகதெரிவுகள் என்பவற்றை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐம்பத்தோராவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்குமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்திடம் கோருகிறது.

இந்த இரண்டு அறிக்கைகளும் பரஸ்பரம் கலந்துரையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.