யாழ் கிட்டு பூங்கா மீது சிங்கள இராணுவம் தீவைப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டுப் பூங்காவின் முகப்பு பகுதியில் சற்று முன்னர் தீவைக்கப்பட்டுள்ளது

தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் இராணுவமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது

மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் தீயணைப்பு பிரிவினர் கால தாமதத்தினால் முகப்பு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை, சிங்கள இராணுவத்தினர் சிலரால் பூங்காவின் முகப்பு பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.