யாழில் இருந்து வவுனியா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பஸ்ஸில் வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா ஊடாக பயணிக்கும் பஸ்களை வழி மறித்து வவுனியாவில் இறங்கவுள்ள பயணிகளிடமே குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகளுடாக வவுனியாவிற்கும் தொற்று பரவுவதை தடுப்பதற்கே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.