இத்தாலியில் பொலிஸ் அதிரடி நடவடிக்கை!இலங்கையர் இருவர் கைது

இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை மீறிய இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணியாமல் ட்ரெம் ஒன்றில் பயணித்து கொண்டிருந்த இலங்கையர்கள்ள இருவர் அந்த நாட்டு கொரோனா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை கைது செய்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் ஆயுதங்களை காட்டி பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எப்படியிருப்பினும் நிலைமையை கட்டுபபடுத்திய பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தியமை மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.