யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு கடலில் இன்று பிற்பகல் 5:00 மணியளவில் கடலில் படகில் பொழுது போக்காக சென்று பொழுது போக்கில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் படகிலிருந்து தவறி கடலில் விழ்ந்து மரணமடைந்துள்ளார்.
இவ் படகு விபத்தில் செம்பியன் பற்று வடக்கை சேர்ந்த 24 வயதுடைய
கெனடி பிறின்ஸ்ரன் என்பவரே மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞன் நீரில் மூழ்கிய நிலையில் அவரை மீட்டு மருதங்கேணி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட வேளை மெணமடைந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி