குடத்தனையில் 21 வயது இளைஞன் திடீர் மரணம்

குடத்தனையில் 21 வயது இளைஞன் திடீர் மரணம்.

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இளைஞர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். 21 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை திடீரென மரணமடைந்துள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிசார் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதுடன் சடலத்தை pcr பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே சடலம் உறவுகளுடன் ஒப்படைப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று பருத்தித்துறை பொலிஸ், மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் தெரிவுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது