சீனா, இலங்கைக்கு வழங்கும் மானியத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் காவல்துறை நிலையங்களுக்கு தகவல் தொலைத்தொடர்புக் கருவிகள் வழங்கப்படவுள்ளன.
காவல்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்களுக்கிடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக “டெட்ரா” (டெரெஸ்ட்ரியல் ட்ரங்கட்) ரேடியோ என்றழைக்கப்படும் தகவல் தொடர்பு வசதிகள் இலங்கையின் காவல்துறைக்கு வழங்கப்படவுள்ளன.
இந்த கருவிகள் உடலியல் புகைப்பட தகவல்களையும் வழங்கும் திறன்களை கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இந்த தகவல் தொழில்நுட்பக் கருவிகள் மேல் மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கே இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரும் போது இந்த கருவிகள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவுள்ளன. இந்த தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் காவல்துறை மா அதிபர், பிரதி காவல்துறை மற்றும் காவல் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தமக்கிடையே உரையாட முடியும்.
எனினும் இந்த வலையமைப்பின் பயன்பாட்டை நாட்டின் பிற பகுதிகளுக்கு காவல்துறை எவ்வாறு விரிவுபடுத்தும் என்பது தொடர்பில் தெளிவாகத் தெரியவில்லை. சீனாவில் இந்த தகவல் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்துகிறது.
இந்த நிலையில் குறித்த தொலைத்தொடர்பு சாதனங்கள் தனியுரிமை சிக்கல்களைக் கொண்டிருக்கின்றவா என்பதை சரிபார்க்க இதுபோன்ற எந்தவொரு நிறுவனங்களும் இப்போது நாட்டில் இல்லை என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இது தொடர்பில் குழுவொன்று அமைக்கப்பட்டு இந்த குழு தனது பரிந்துரைகளை 45 நாட்களில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்தத் திட்டத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட சி.சி.டி.வி காணொளி அமைப்பு என்பனவும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.