ஆதாரங்களை திரட்டும் பொறிமுறை – யஸ்மின் சூக்கா வெளியிட்ட தகவல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையானது நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதையின் முதற்படியாக உள்ளது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பொறிமுறைக்கு நேர்த்தியான குற்றவியல் வழக்கினை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பதை விளங்கிக் கொள்ளும் மற்றும் விரிவான குற்றவியல் சட்ட அனுபவம் கொண்ட துணிவான வழக்கறிஞர், தலைமை அனுபவம் கொண்ட துணிவான வழக்கறிஞர் தலைமை தாங்குவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பொறிமுறையானது பல்வேறு தளங்களில் இருந்து கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் தொலைந்துவிடாது சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பாதுகாப்பதை உறுதி செய்யுமொரு இடைக்கால நடவடிக்கையை கொண்டிருக்கிறது என்றும், இது எதிர்காலத்தில் நீதிமன்ற அல்லது தீர்ப்பாய குற்றவியல் வழக்குகளுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், இப்பொறிமுறையானது எவ்வளவு தூரத்திற்குப் பின்சென்று ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பை மேற்கொள்ளும் என்பது தெளிவற்றதாக உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,