அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்கும் திகதி அறிவிப்பு

நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை திறக்கவும்  இரண்டாம் தவணை விடுமுறை காலத்தை ஒரு வார காலத்திற்கு மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

தேசிய பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் ஆகையால் அதிக நாட்கள் விடுமுறை வழங்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பல்வேறுப்பட்ட பேச்நுவார்த்தைகளுக்கு மத்தியில் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி  செவ்வாய்கிழமை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக  மாணவர் விடுதிக்குள் சமூக இடைவெளியை பேணுவது சவால்மிக்கது.   பல்கலைககழக மாணவர் விடுதிகள் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது.

ஆகையால் பல்கலைக்கழக மாணவர்களில் 3 ஆம்  மற்றும் 4 ஆம்  வருட மாணவர்களை மாத்திரம் முதற்கட்டமாக  மாணவர் தங்குமிட விடுதிக்கள் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 ஆம் மற்றம் இரண்டாம் வருட மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து  பின்னர் அறிவிக்கப்படும்.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒப்டோபர் மாதம் 3 ஆம் திகதி  நடத்தவும், உயர்தர பரீட்சையை ஒப்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் ஒப்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை நடத்தவும்,  சாதாரண தர பரீட்சையை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் நடத்தவும் தற்போதைய சுகாதார மற்றும் பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தவணை  பாடசாலை விடுமுறை காலத்தை  ஒரு வார காலத்திற்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறுகிய காலத்தில் பாடதிட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் விடுமுறை காலத்தை நீண்ட நாட்களுக்கு வழங்க முடியாது.தேசிய பரீட்சைகளுக்கு துரிதமாக தயாரக வேண்டிய தேவை காணப்படுகிறது.  கற்றல் நேரத்தை அதிகப்படுத்துவது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது   . கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள கல்வி துறையினை வெகுவிரைவில் சீர் செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.