இலங்கை விரைவில் உலகில் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும்

More

இலங்கை விரைவில் உலகில் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும்

1 hour ago

      

0SHARES

விளம்பரம்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அமைய இலங்கை விரைவில் முற்றாக பிராந்திய வல்லரசுகள் மற்றும் உலகின் பலமிக்க நாடுகளின் அதிகார போட்டிக்கு மத்தியில் சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டத்திற்கு எதிராக புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டப்படும் போது அரசாங்கம் என்ன கூறியது.

இலங்கையின் இறையாண்மைக்காக மனித உரிமை உட்பட மக்களின் உரிமைகள் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அரசாங்கம் கூறியது.

ஏப்ரல் மாதம் என்ன கூறியது. வெளிநாட்டு முதலீடுகளுக்காக இறையாண்மையை அர்ப்பணிப்பதாக கூறியது.

மிக விரைவில் இலங்கை முற்றாக இந்து சமுத்திரத்தில், உலகில் பலமிக்க பிராந்திய ஏகாபத்திய நாடுகளின் அதிகார போட்டிக்குள் சிக்கும் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.