வலிகாமம் கிராமசேவகர்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் மக்கள்

 

யாழ் வலிகாமம் வடக்கு மல்லாகம் j/212 கிராம சேவாகர் பிரிவில் தகரக் கொட்டகையில் வசித்துவந்த பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு கடந்த ஆண்டு கடன் காரராக மாற்றும் அரசின் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த குடும்பத்தலைவி ஊனமுற்ற நிலையில் ஒரு மகனும் நோய்வாய்ப்பட்டு இருப்பதனாலேயே இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறான நிலையில் கணவரின் உழைப்பில் மருத்துவச் செலவையே போக்கமுடியாத நிலையில் கடன் பட்டு அந்த வீட்டுத்திட்டத்தையும் கட்டி முடித்து தற்போது கடன் சுமையுடன் இருக்கும் குடும்பத்தினருக்கு கடந்த மாதம் அவர்களுக்கான சமுர்த்தி உதவித் திட்டத்தை சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் ஊடகா இரத்துச்செய்யப்பட்டுள்ளது இந்த நடவடிக்கை வேண்டுமென்றே நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்

பாதிக்கப்பட்ட பெண் பலதடவைகள் சென்று தங்களை உதவி வழங்கும் திட்டத்தில் இணத்துக்கொள்ளும் படி கேட்டும் இணைத்துக்கொள்ள முடியாது நீங்கள் பெரிய வீடு கட்டியுள்ளீர்கள் என சமூர்த்தி உத்தியோகத்தர் கூறியுள்ளார்

இவ்விடயத்தை கிராம சேவையாளரிடம் கூறியபோது உங்கள் குடும்பநிலை எனக்குத் தெரியும் நான் சமூர்த்தி மயூரனிடம் கதைக்கிறேன் என்று கூறிய கிராம சேவகர் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டிச் சென்று கேட்டபோது, மயூரன் கிராம சேவகருக்கு கூறினார் இவர்கள் பெரியவீடு கட்டி அலங்காரம் பண்ணி வைத்திருக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு எந்த ஒரு சந்தர்பத்திலும் நான் வழங்க சம்மதிக்க போவது இல்லை என கூறியுள்ளார்

எனவே கிராம சேவகரும் இந்த விடையத்தில் கைவிரித்துள்ளார் குறித்த சம்பவத்தை தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபரிடம் முறையிட்டதுடன் தனது ஊனமுற்றோர் அடையாள அட்டையையும் காண்பித்து மகனின் மருத்துவ ஆவணங்களையும் காட்டியுள்ளார் அவற்றை பார்வையிட்ட உதவி அரசாங்க அதிபர் சமுர்த்தியில் இருந்து நீக்கியமைக்கான காரணத்தை கிராம சேவகரிடம் இருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார்

குறித்த பெண் கிராம சேவகரிடம் கடிதம் கேட்ட போது கிராம சேவகர் கடிதத்தை எழுதிவிட்டு சமுர்த்தி அலுவலகரிடம் அனுமதி கேட்ட போது அதற்கு சமுர்த்தி அலுவலகர் மயூரன் கடிதம் வழங்கவேண்டாம் என கூறியுள்ளார்

குறித்த கிராமத்தில் உள்ள குடும்பம் ஒன்றின் அங்கத்தவர் சுவிஸ் நாட்டில் பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்து பல வசதி வாய்ப்புடன் இருக்கின்றனர் அந்த குடும்பத்துக்கு சமூர்தி கொடுப்பனவு வழங்கப்படுகிறது

இனவே இந்த விடையத்தில் அக்கறை உள்ள அதிகாரிகள் விரைந்து கிராம உத்தியோகத்தர்,சமூர்தி உத்தியோகத்தரை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுபோன்ற ஏழைகளை வஞ்சிக்கும் செயல்களையும் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது