இலங்கையின் சகல நிர்வாக மாவட்டங்களினதும் பாதுகாப்பு குறித்த கோட்டாவின் அதிரடி வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையின் சகல நிர்வாக மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் , விமானப்படை மற்றும் கடற்படை ஆகியன கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் , அமைதியை நிலைநாட்டவும் 25 மாவட்டங்களிலும் முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

 

இது தொடர்பில்  கோத்தாபய ராஜபக்ஷவினால் நேற்று புதன்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.