கோட்டா அரசின் தவறான முடிவுகளே கொரோனா தொடர்ந்து பரவுவதற்கு காரணம் – சஜித்

இலங்கை அரசாங்கத்தின் தவறான முடிவுகளே நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவுவதற்கு காரணம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்படும் தருணத்தில் மூன்றாவது அலை உருவாகிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெருமளவானவர்கள் முகாம்களிற்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவர்கள் அனைவரும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படாததை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தற்போது பின்பற்றும் நடைமுறைகள் காரணமாக மேலும் பலர் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.