தென்கொரிய ஜனாதிபதி மே 21 அமெரிக்காவுக்கு விஜயம்

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் எதிர்வரும் மே 21 அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளார்.

“எங்கள் கூட்டணியை மேலும் வலுப்படுத்தவும், எங்கள் நெருக்கமான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஜனாதிபதி மூன்னுடன் இணைந்து பணியாற்ற ஜனாதிபதி பைடன் எதிர்பார்ப்பை கொண்டுள்ளார்” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி ஒரு அறிக்கையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

“தென் கொரிய ஜனாதிபதியின் வருகை அமெரிக்காவிற்கும் கொரியா குடியரசிற்கும் இடையிலான இரும்புக் கூட்டணியையும், நமது அரசாங்கங்கள், மக்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கிடையிலான பரந்த மற்றும் ஆழமான உறவுகளையும் எடுத்துக்காட்டுகிறது” என்றும் அவர் கூறினார்.

ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த பின்னரும் பைடன் பதவியேற்ற பின்னரும் வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் இரண்டாவது உலகத் தலைவராக மூன் ஆவார்.