ரஷ்யாவின் ஸ்பூட்னிக் – வி தடுப்பூசிகளின் பதினைந்தாயிரம் குப்பிகள் மே 4ம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள. இது உடனடியாக மேல் மாகாணத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் இறுதிக்குள் 200,000 குப்பிகள் கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.
எனினும் இந்த 15,000 தடுப்பூசி குப்பிகளும் செலுத்தப்பட்ட பின்னரே ரஷ்யா கூடுதல் அளவு ஸ்புட்னிக் – வி தடுப்பூசி குப்பிகளை அனுப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் ஒருவருக்கு இரண்டு குப்பி அளவில் தேவைப்படுகிறது, இது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்பூட்னிக் – வி தடுப்பூசிகளை இலங்கை 9.95 டொலர் விலையில் கொள்வனவு செய்கிறது