வவுனியாவில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட வீடுகள் பூர்த்தி செய்யப்படாமையால் மக்கள் கவலை

வவுனியாவின் பல கிராமங்களில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் 120 வீடுகள் இவ்வாறு கட்டி முடிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இப்பகுதியில் கொட்டகைகளில் வாழ்ந்த மக்களிற்கு வீடுகள் வழங்குவதாக தெரிவித்து அவர்களின் பங்களிப்புடன் வீடுகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக வீடுகள் கட்டி முடிக்கப்படாத நிலையில் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அன்றாடம் கூலித்தொழிலையே நம்பி வாழும் மக்கள் தற்போது கடனாளியாகவே வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய அரசாவது தங்களது வீடுகளை பூர்த்தி செய்து தரவேண்டும் என காத்தார்சின்னக்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.