சிலாபத்திலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரும் கரையோரகாவல்படையினரும் சமிந்துகம பகுதியில் நேற்றும் இன்றும் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது வெளிநாட்டிற்கு படகு மூலம் செல்வதற்குதிட்டமிட்டிருந்த 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முதலில் 14 பேரையும் அவர்களிற்கு இடமளித்த வீட்டின் உரிமையாளரையும் கைதுசெய்ததாக தெரிவித்துள்ள கடற்படையினர் பின்னர் 16 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும ஆண்கள் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு முல்லைதீவு புத்தளத்தை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.