முள்ளிவாய்க்கால் நினைவு தூபியுடைப்புக்கு வைரமுத்து கண்டனம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் உள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு இந்தியாவின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் முல்லைத்தீவில் உடைக்கப்பட்டது துயரத்தின் தொடர்ச்சியாகும்.

இறந்தவர்களின் நினைவுச்சின்னங்களும் இருப்பவர்களின் இதயங்களும் ஒரே நேரத்தில் உடைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள அவர்,

சின்னங்களைச் சிதைக்காதீர்கள், உரிமைகளைப் பறிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்