கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் 793 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொரோனா பரவலையடுத்து சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் குறித்த 793 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 16,386 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற கைதுகளில் அதிகளவானவை மத்தளையில் இடம்பெற்றுள்ளது. அங்கு 161 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும், நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த 110 பேரும், குளியாபிட்டியைச் சேர்ந்த 52 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், கொழும்பு, கிராண்ட்பாஸ் மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளின் போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முச்சக்கர வண்டிகளில் பயணித்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.