தமிழின படுகொலையாளி சவேந்திர சில்வாவிற்கு தடை விதிக்குமாறு கடும் அழுத்தம்

இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய அரசு, தடைகளை விதிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொழில் கட்சி சார்பில், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானியாவின் நிழல் அமைச்சரான ஸ்டீபன் கினொக் (Rt. Hon. Stephen Kinnoc MP) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரித்தானியா தனது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் (Global Sanction Regime) கீழ், சவேந்திர சில்வாவுக்கு எதிராக பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தென்னாசிய மற்றறும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சரான தாரிக் அஹமட் பிரபு (The Lord Ahamed of Wimbledon) அவர்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் கடந்த ஏப்பரல் மாதம் யஸ்மின் சூக்கா தலைமையிலான ITJP இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்த 50 பக்க குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள்காட்டியுள்ள நிழல் அமைச்சர், இறுதி யுத்தத்தில் சவேந்திர சில்வா 58வது படைப்பிரிவின் இராணுவத் ததளபதியாக இருந்தார் என்பதற்கான ஆதாரங்களை குறித்த அறிக்கை வழங்குவதுடன், குறித்த யுத்தத்தில் அவருக்கும் அவரது படைகளுக்கும் இடையில் ஒரு கட்டளை தொடர்பு இருந்ததையும் அந்த அறிக்கை விவரிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அடிப்படையில் சவேந்திர சில்வாவை தடைசெய்யும்படி கோரி, 01 மே 2021 அன்று இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய அரசிற்கு அவசர வேண்டுகோள் விடுத்ததுடன், அனைத்து அமைப்புக்களையும் ஒன்றுணைந்து அழுத்தம் வழங்குமாறும் கோரியிருந்தனர்.

அத்துடன் ICPPG இன் இளையோர் அணியாகிய இரண்டாம் தலைமுறையினர் இதனை நடைமுறைப்படுத்த ஆரதவு தேடி இணையவழி கையெழுந்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தனர். அதேநேரம் அவர்கள் அனைத்து பிரிந்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்புகொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி, பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கோரி வருவது குறிப்பிடத்தது.

இந்த முயற்சிகளின் பலனாக, கடந்த 18 மே 2021 அன்று ஸ்கொட்லாந்து தேசிய கட்சி (SNP) கட்சியின்பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆனியால் (Hon. McLaughlin Anne) பிரித்தானிய பாராளுமன்றில் காலை நே ரவிவாதத்துக்கான முன் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது.

இதுவரை 20 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் இவர்களின் முயற்சியால் பெறப்பட்டுள்ளது. இந்தவகையில் பிரித்தானியாவின் எதிர்கட்சியான, தொழில்கட்சியின் தலைமையுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் பயனாக, இன்று தொழில்கட்சியினர் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதுடன், பிரிந்தானிய அரசின்மீது கடும் அழுத்தத்தையும் பிரயோகித்திருப்பது குறிப்படத்தக்கது.

இது போல ஏனைய கட்சிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றுவருகின்றன. இனப்படுகொலையில் பலியான தமிழ் உறவுகளை நினைவுகூரும் இந்த மாத்த்தில், அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகவும் இந்த வருடத்துக்கான இலக்காகவும் சவேந்திர சில்வாவை தடை செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கும் படி கேட்டுக்கொண்டுள்ள இளையோர்கள், இந்த முன்பிரேரணையை வெற்றியளிக்க செய்ய, அனைத்து மக்களையும் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு இந்த பிரேரணக்கு ஆதரவாக கையெழுத்து இடும்படி அழுத்தம் கொடுக்குமாறும் இளையோர் அறைகூவல் விடுத்திருந்தனர்.

GalleryGallery